தங்களின் வருகைக்கு நன்றி

Sunday, November 15, 2009

துல் ஹஜ் 10 நாட்களின் சிறப்பு

1.துல் ஹஜ்ஜின் பத்து நாட்களைக் கொண்டு இறைவன் ஆணையிட்டுக் கூறுவதென்றால் நிச்சயமாக அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கவேண்டும இல்லை யெனில் அவ்வாறு ஆணையிட்டுக்கூறும் அவசியமில்லை.

2.அடியார்கள் தன்னை குறிப்பிட்ட நாட்களில் நினைவுபடுத்த வேண்டும் என்று கூறிய நாட்களும் இந்த துல்ஹஜ் பத்து நாட்களில் தான் வருகிறது.இறைவன் திருமறையில் கூறுகிறான்:

"அவர்கள் தங்களுடைய (இம்மை,மறுமைப்) பேறுகளை பெறுவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காகவும்,குறிப்பிட்டநாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும்,( ஹஜ்ஜுக்கு வருவார்கள்) "

இவ்வசனத்தில் ‘குறிப்பிட்ட நாட்கள்’ என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும் என்பது பெருமபாலான் அறிஞர்களின் கருத்தாகும்। இப்னு உமர் (ரலி)இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்.

३. துல்ஹஜ்ஜு பத்து நாட்களும்,உலக நாட்களில் மிகவும் சிறந்த நாட்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையும் விடவும் சிறந்ததா? என நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, ஆம் அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவதையும் விடவும் இது சிறந்தது ஆனால் ஒருவன் அவனுடைய பாதையில் தனது உயிர்,பொருள் போர் ஆகிவற்றால் போர் புரிந்து திரும்பி வராமல் ஷஹீதாகி மரணித்தவரைத் தவிர’ எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ,ஆதாரம்: புகாரி)

4.அரபா நாளும் அதில் உள்ளது. அரபா நாள் பாவங்களுக்கு மன்னிப்பும், நரகவிடுதலையும் நிடைக்கும நாளாகும்।நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ் நரகிலிருந்து தனது அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரபா நாளாகும். இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செயவதில்லை.அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து,இவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான். (அறிவிப்பவர் ஆயிஷா(ரலி), ஆதாரம்: முஸ்லிம்.)
துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்புக்கும்,மாண்புக்கும் அரபாத் நாள் அந்நாளில் இருப்பது ஒன்றே போதுமானது.

5. துல்ஹஜ் பத்துநாட்களிலும் அமல் செய்வது ஏனைய நாட்களில் அமல் செய்வதைவிடவும் மேலானது. ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:- உலக நாட்களில் மிகவும் அமலகள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்களாகும.; இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்த நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹு என்றும்,அல்லாஹு அக்பர் என்றும்,அல் ஹம்து லில்லாஹ் என்றும் அதிகமதிகமாகச் சொல்லுங்கள்! (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூலகள் : முஸ்னத் அஹ்மத்,தப்ரானி.)

No comments:

Post a Comment