தங்களின் வருகைக்கு நன்றி

Thursday, November 26, 2009

ஹஜ்ஜுப் பெருநாளில்........


ஹஜ்ஜுப் பெருநாளில் கடைபிடிக்கவேண்டிய சுன்னத்துகள்.

ஈதுல் அள்ஹா இறை ஆணைப்படி நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தம் மகன் இஸமாயீல் (அலை) அவர்களைப் பலியிட முன்வந்த இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படும் பெருநாளாகும்.






கடைபிடிக்கவேண்டிய சுன்னத்துகள்:-

1. பெருநாளன்று ஒவ்வொரு முஸ்லிமும் குளித்துப் புத்தாடை புனைவது ஸுன்னத்தாகும். ஆடை அணிவதில் ஆடம்பரம் கூடாது.




தொழுகைக்குச் செல்லு முன் இப்னு உமர்(ரலி) அவர்கள் குளித்துவிட்டுச் செல்வார்கள். (அறிவிப்பவர் : நாஃபிஹ் (ரலி) ஆதாரம்: முவத்தா.

2. . ஆண்கள் நறுமணம் பூசிக்கொள்வது நபிவழியாகும்.

3. .பெண்கள் புத்தாடை அணியலாம். ஆனால் நறுமணம் போன்ற வாசனைத் திரவியங்கள் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

4.பெருநாள் தொழுகைகளுக்கு சிறுவர்களையும் அழைத்துச்செல்ல வேண்டும். நபி(ஸல்) அவர்களுடன் சிறுவராக இருக்கும் போது பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புகாரி-975)




5.ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்குச் செல்லும் போது எதுவும் உண்ணாமல் செல்வதும் ஸுன்னத்தாகும்.
ஈதுல் அள்ஹா பெருநாளில் தொழாதவரை சாப்பிடமாட்டார்கள் என இப்னு புரைதா தன் தந்தையின வாயிலாக அறிவிக் கிறார்கள். ( ஆதாரம்: அஹ்மத் திர்மிதி இப்னு ஹிப்பான்)

6.ஆண்கள் சப்தமாக தக்பீர் சொல்லுவதும் பெண்கள் மெதுவாக தக்பீர் சொல்லுவதும் ஸுன்னத் நபிவழியாகும்.

‘நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று தமது வீட்டை விட்டுப் புறப்படுவதி லிருந்து தொழுமிடம் வரும் வரை தக்பீர் சொல்பவர்களாக இருந்தார்கள்’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.




7.ஹஜ்ஜுப் பெருநாளின் போது பிறை ஒன்பது பஜ்ரிலிருந்து 13 அஸர் வரை தக்பீர் கூறுவது சுன்னத்தாகும்.

8.பெருநாள் தொழுகைக்காக நடந்து செல்வது நபி வழியாகும் என அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் . (ஆதாரம் திர்மிதி)


9.சூரியன் உதயமாகி தொழுகை தடுக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு பெருநாள் தொழுகை தொழுவது நபிவழியாகும்(புகாரி,அபூதாவூது,இப்னு மாஜா, ஹாக்கிம்)

குறிப்பு: பொழுது புலர்ந்து சுமார் இருபது நிமிடங்கள் வரை தடுக்கப்பட்ட நேரமாகும்.அதன் பின்னர் தொழலாம்.

10.பெருநாள் தொழுகைக்குச் செல்லும்போது ஒரு வழியாகச்சென்று மறுவழி யாகத் திரும்புவது நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையிலிருந்து (திரும்பும் போது சென்றவழியாக இல்லாமல்) வேறு வழியாக திரும்பி வருவார்;கள். ஏன ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி)

‘பெருநாள் என்றாலே பொழுது போக்கும் நாள்! ஆரவாரமிக்க நாள்! உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும் நாள்’ எனக் கருதிக் கொண்டு நம்மில் பலர் வேடிக்கை விளையாட்டுகளிலும், கேளிக்கைகளிலும், திரைப்படங்களைப் பார்ப்பதிலும் பொழுதைக்கழிக்கின்றனர். ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கலந்து பலநிகழ்சிகளில் பங்கேற்கின்றனர்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத நிகழ்ச்சிகள், வைபவங்களை தவிர்த்து மாண்பார் துல்ஹஜ்ஜின் பேறுகள் அனைத்தையும் பெறுவதற்கும், அந்நாட்களில் அதிகமதிகமாக வணக்கங்களில் ஈடுபடுவதற்கும் வல்லான் அல்லாஹ் அருள் புரிவானாக!

No comments:

Post a Comment