தங்களின் வருகைக்கு நன்றி

Monday, December 7, 2009

அரபு நாடுகளில் வேலை இழக்கும்



அரபு நாடுகளில் வேலை இழக்கும் இந்தியர்களுக்கு மறுவாழ்வு - மத்திய அரசு யோசனை




அரபு நாடு​களில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வேலைபார்க்ககும் இந்தியத் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐக்​கிய அரபு நாடு​க​ளில் சுமார் 20 லட்​சம் இந்​தி​யர்கள் பல்வேறு தொழிற்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்களல் பலர் வேலையிழந்து தாய​கம் திரும்​புகையில், அவர்களின் மறு​வாழ்​வுக்​காக,​ சிறப்பு நிதியம் ஒன்றை மத்​திய அரசு ஏற்படுத்த எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்​கிய அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையில் அங்கு நடைபெற்ற ரியல் எஸ்டேட் வர்த்தகத்தின் பிரிவான, கட்டுமானத் தொழில்துறை மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துறையில், உள்ள ஏராளமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனேக இந்தியர்கள் தங்​க​ளது வேலையை இழக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. குறிப்பாக கடன் நெருக்​கடிக்குள் துபாய் சிக்​கி​யுள்​ளதால் அங்கு மிகுந்த பொருளாதார நெருக்கடியும், தொழில் முடக்கமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்​டில் மட்டும், 2,700 கோடி அமெ​ரிக்க டாலர்​களை, துபாயில் பணிபுரிந்த இந்தியத் தொழிலாளர்கள் மூலமான அந்நியச் செலாவாணியாகப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்திய மத்திய அரசு, இந்த மறுவாழ்வு உதவித் திட்டத்தை விரி​வாக வகுத்து வருகிறது. இதன் மூலம், அரபு நாடுகளிலிருந்து வேலையை இழந்து தாய​கம் திரும்​பும் இந்​தி​யர்​க​ளது வாழ்வினை மறுசீரமைக்க முடியும் என அரசு நம்புவதாக, வெளி​நாடு வாழ் இந்​தி​யர்​க​ளின் விவ​கா​ரங்​களுக்கான அமைச்​ச​கத்​தின் செய​லாளர் மோகன்​தாஸ் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு விரை​வில் வெளி​யி​டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment