மணிக்கு 350 கி.மீ வேகத்தில் ஓடும் ரயில் வண்டி
உலகின் முதலாவது வல்லரசாகும் சீனாவின் இன்னொரு
முயற்சிவிமானத்தின் வேகத்தில் ரயில் வண்டி சேவை.
மணிக்கு 350 கி.மீ வேகத்தில் ஓடும் ரயில் வண்டியை இன்று சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் வண்டியே இன்றய கணக்குகளின் பிரகாரம் உலகத்தின் அதிவேகமானது என்றும் டென்மார்க் தொலைக்காட்சி சேவை இரண்டு தெரிவிக்கிறது. சீனாவின் இரண்டு பிரதான நகரங்களான வுகான் – குவாங்சூ ஆகியவற்றுக்கு இடையில் முதல் கட்டமாக இந்தச் சேவை இடம் பெறுகிறது. இந்த இரண்டு இடங்களையும் சாதாரண ரயில் வண்டிகள் கடக்கும்போது 10 மணி நேரங்கள் ஆகும். ஆனால் இந்தப் புகைவண்டியோ மூன்று மணி நேரங்களில் கடந்துவிடும். சீனாவில் இந்த நகரங்களுக்கு இடையில் பறக்கும் விமானங்களைப் போல ரயில் வண்டி போவது சீனாவின் வளர்ச்சியில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றமாகும்.
கடந்த 1000 வருடங்களுக்கு முன்னர் இன்று அமெரிக்கா இருப்பதைப் போல உலகத்தின் சூப்ப மக்ற் என்று சொல்லப்படும் முதலாவது நாடாக இருந்தது சீனாவே. அதனுடைய வீழ்ச்சிக்கு பின்னரே மற்றய வல்லரசுகள் உருவாக்கம் பெற்றன. இனியாவது தனது முதலாவது இடத்தை எட்டித்தொட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சீனா முயன்று வருகிறது. இந்த நோக்கிலிருந்து சீனா பின்வாங்காது என்பதை அதனுடைய சமீபத்திய செயல்கள் காட்டுகின்றன.
டென்மார்க்கில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சீனாவின் வருடாந்த தேறிய தேசிய உற்பத்தியில் ஒரு வீதத்தை பிடுங்க ஐ.நாவின் போர்வையில் மேலை நாடுகள் முயன்றபோதும் சீனா இலாவகமாக தப்பித்தது குறிப்பிடத்தக்கது. நிலவுக்கு மனிதனை அனுப்புவது, உலகளாவிய தரமான பல்கலைக்கழகங்களை அமைப்பது என்று சமீபகாலமாக சீனா அடைந்துவரும் பெரும் முன்னேற்றங்களில் இந்த ரயில் வண்டியும் ஒன்றாகும். நாட்டை முன்னேற்றுவது வேகமான பயண ஒழுங்குகளே என்பது குறிப்பிடத்தக்கது.
இது நாம் தமிழில் கூறுவது போல புகைவிடும் புகைவண்டியோ, ஒரு பெட்டிக்கு பின்னால் இன்னொரு பெட்டி தொடர்ந்து போகும் தொடர்வண்டியோ அல்ல என்பதால் வேக ரயில் என்றே அழைக்க வேண்டியிருக்கிறது.







No comments:
Post a Comment