தங்களின் வருகைக்கு நன்றி

Sunday, January 24, 2010

'BED ROOM' டிப்ஸ்






பெட் ரூம் மனதிற்கு இதமாய் இருந்தால் நல்ல தூக்கம் ரிலாக்ஸ் பண்ணமுடியும்,ஆடி ஓடி களைத்து வரும் போது நாம் ஓய்வு எடுக்கும் அறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது தப்பில்லையே..இதோ சில டிப்ஸ்,எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் சிலவற்றை பிறர் கூறும் போது நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

1.எப்பவும் பளிசென்று வைத்துக்கொள்வது முக்கியம்.ஸ்கிரீன் போட்டிருந்தால் அதற்கு கொஞ்சமாவது பொருந்துகிறமாதிரி பெட் ஸ்ப்ரட் தேர்ந்து எடுப்பது அவசியம்.பார்ப்பதற்கு மனதை கொள்ளை கொள்ளும். ஸ்கிரீன்கொஞ்சம் டார்க் கலர் கலந்து இருந்தால் பகலில் தூங்கும் போது மிக வெளிச்சமாக இருக்காது.




2.பெட் ரூமில் பெட்,ட்ரெஸிங் டேபிள்,வார்ட்ரோப் அல்லது பீரோ அல்லது செல்ப் மட்டும் இருக்குமாறு இருந்தால் நன்றாக இருக்கும்.சாமான் அதிகம் இருந்தால் அழகாக அடுக்கி வைக்க வேண்டும்.

3.சிலர் மெத்தையில் உள்ள பாலிதீன் கவரை கூட பிரிக்காமல் வைத்திருப்பார்கள்.அது உடம்புக்கு நல்லதில்லை.அதை பிரித்து விட்டு பெட் கவர் போடுவது நல்லது.பெட் கவர் இப்பொழுது நான்கு பக்கமும் எலாஸ்டிக் வைத்து வந்து விட்டது,அதை வாங்கி போடலாம்,அல்லது நாமே நான்கு பக்கமும் எலாஸ்டிக் வைத்து தைத்து போடலாம்,அதன் மேல் பெட் ஸ்ப்ரட் விரிப்பது முக்கியம்..பழைய மாதிரி கவர் போட்டு கழற்றுவது கடினம்.




4.ஒவ்வொரு பெட்டுக்கும் மூன்று அல்லது நான்கு பெட் கவர் பில்லோ செட் வைத்துக்கொள்வது நல்லது.அழுக்காவதை பொறுத்து வாரம் ஒருமுறையோ அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையோ மாற்றிக்கொள்ளலாம்.
. 5.ப்லான்கெட்,கில்ட் உபயோகிப்பவர்கள் குறைந்தது வருடம் நான்கு முறையாவது வாஷ் கொடுத்து வாங்கி பயன்படுத்துவது நல்லது.





6.பெட் அடியில் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்,சிலர் இடம் பற்றாக்குறையால் சூட் கேஸ்,அட்டைப்பெட்டிகளை அடுக்கி வைத்திருப்போம்.அதனால் அடிக்கடி செக் செய்து கொள்வது நல்லது.முக்கியமாக குழந்தை பெட் அடியில் வாரம் ஓரிரு முறை பார்க்கவேண்டும்,பென்சில்,ரப்பர்,பேப்பர்,நோட்புக் இன்னும் முக்கியமானவைகளை கண்டறியலாம்.




7.பெட் ரூமிலேயே பெட் கவர் செட்,பெட் சீட்ஸ்,எக்ஸ்ட்ரா தலையணை,பாய்,கில்ட்,ப்லான்கெட் ,டவல் வைக்க இடம் ஒதுக்கினால் அவசரத்திற்கு எடுக்க ஈசியாக இருக்கும். கொஞ்சம் மெனக்கெட்டு இதனை எல்லாம் சரி செய்தால் நமக்கு மிகவும் திருப்தியாக இருக்கும்.

No comments:

Post a Comment