தங்களின் வருகைக்கு நன்றி

Thursday, January 14, 2010

இந்தியாவில் "கார்"காலம்!



பருவம் குறித்த இடுகையல்ல. கார்களின் உருவம் குறித்தது. 2012 க்குள் இந்தியச் சாலைகளில் சிறிய கார்களின் அணிவகுப்பைக் காண முடியும். TATA வைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் சிறிய கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன. பொருளாதாரத் தேக்கத்திலும் அக்‌ஷயதிருதியைக்குத் தங்கம் வாங்கும் இந்தியச் சந்தையை மிகச்சரியாகக் கணித்த பின்னரே இறங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். இனி, கார்கள்.....




TATA NANO: லட்ச ரூபாய்க் கார் தயாரிப்புக் கனவை நிஜமாக்கியுள்ளது NANO. கார் வாங்க முடியும் என நடுத்தர வர்க்கத்தை நம்பவைத்தது TATA வின் சாதனை. வரவிருக்கும் சிறிய கார்களுக்கு முன்னோடி. (பதிவு செயதவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க முடியாததால் கிட்டத்தட்ட 50,000 பேர் வாங்குவதிலிருந்து பின்வாங்கிவிட்டார்கள் என்கிறது செய்தி.) ஆனாலும், இவை NANO மீதான வசீகரத்தைப் பாதிக்கவில்லை என்பதோடு, பல நிறுவனங்களும் பின்பற்றும் வர்த்தக வடிவமாகியுள்ளது.





Honda: 2CV என்ற பெயரில் சிறிய கார் தயாரிக்கிறது. Man Maximum - Machine Minimum என்பது இவர்கள் Logic வாசகம்! 2011 க்குள் வந்துவிடும் என்கிறது நிறுவனம். ராஜஸ்தானில் தயாராகிறது. (குறைந்த விலையில் பைக்கும் தயாரிக்கப் போகிறது HONDA!).









Hyundai: 800 கோடி முதலீட்டில் Santro வை விடச் சிறிய கார் தயாரிக்கிறது நிறுவனம். 2012 வெளியீடு. சென்னையில் தயாரிக்கிறார்கள் என்பது விசேஷச் செய்தி. இந்தியாவில் தங்கள் சந்தை இந்தக் காரால் பெருகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது. இன்னும் பெயர் வைக்கவில்லை.



FIAT: அடுத்த வருடத்தில் FIAT ன் சிறிய கார்கள் ஓடும். இந்தியச் சூழலுக்கேற்ப தயாரிக்கப்படும் தங்கள் சிறிய கார்கள் நல்ல Mileage தரும் என்கிறது FIAT.



Toyota: iQ என்பது இவர்களின் குட்டி கார். காரின் நீளம் 3 மீட்டருக்கும் குறைவு. பெங்களூரில் தயாரிக்கப்படுகிறது. 30 பில்லியன் முதலீடு. 2010 லேயே கிடைக்கும் என்கிறார்கள்.







General Motors: அமெரிக்காவின் GM சறுக்கினாலும், இந்திய வர்த்தகம் தடுமாறவில்லை. Chevrolet Beat இவர்களின் சிறிய கார். விரைவில் வெளியீடு என்கிறது GM.







Nissan & Bajaj Auto: TATA NANO வைவிடக் குறைவான விலையில் தரப்போவதாகச் சொல்கிறார்கள். சென்னையில் தயாரிப்பு துவங்குகிறது. Renault, Nissan Motor Co & Bajaj நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பெயர் தெரியவில்லை. வடிவமைப்பு மற்றும் தயாரிப்பை Bajaj மேற்கொள்கிறது. Renault, Nissan நிறுவனங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மார்க்கெட்டிங்கைக் கவனிக்கும்.








Volkswagen: இவர்கள் கார் Up! சிறிய காராக இருந்தாலும், தாராளமான இடவசதியும், Climate Control System, Sensor Technology for Navigation போன்ற நவீன வசதிகளும் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள் நிறுவனத்தினர். எப்போது வெளிவரும் என்று தெரியவில்லை. ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் கார் காதலர்கள்!


வாங்கும் திறன் அதிகரித்துவிட்ட இன்றைய தினங்களில் புதுவரவுகள் எதிர்பார்க்கக் கூடியதே. கார்களின் விலை ஒரு லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரை வேறுபடும். வசதிகளைப் பொறுத்து விலை மாறும். நிறைய நிறுவனங்கள் ஈடுபடுவது பயனாளர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் வசதியையும், போட்டியால் தரமான தயாரிப்புகளும் கிடைக்கலாம். ஆனால், இதற்காக விவசாய நிலங்களை எந்த மாநில அரசும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது!

No comments:

Post a Comment