இது ஒரு புது மாதிரியான வீடு, ஆஸ்திரேலியாவில், வின்காம், பகுதியில் இந்த சுழலும் வீடு புதுசா கட்டியிருக்காங்க.
சூரியன் எந்த திசையில போகுதோ, அந்த ப்க்கம் கூடுதலா வெளிச்சம் கிடைக்கிறதுக்காக இப்ப்டி வடிவமைச்சு இருக்காங்க, பல லட்சம் டாலர்கள் கொட்டி இந்த வீட்டை கட்டி இருக்காங்க, இதுல குடியிருக்கிற ஜோடி ராத்திரியில தூங்கும்போது கிழக்கு பக்கம் தலை வச்சு தூங்குவாங்களாம், காலை எழுந்திருக்கும்போது வடமேற்கு திசையில எழுந்திருப்பது மிகவும் ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்காம்.
நாம பொதுவா ஒரு வீட்டுக்கு போனா, வாங்க வீட்டை சுத்தி காட்டுறேன்னு சொல்லுவாங்க, ஆனா அது இந்த வீட்டுக்குதான் பொருந்தும்.
ஆனா இந்த தெருவுக்கு வருகிற போஸ்ட்மேன், பால் கொண்டு வருகிறவங்களுக்கு வாசல் ஒவ்வொரு நாளும் மாறி மாறி இருக்கிறது குழப்பமா இருக்கும்.
No comments:
Post a Comment