தங்களின் வருகைக்கு நன்றி

Thursday, January 28, 2010

மனிதன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்











* நம்பிக்கையோடு வாழுங்கள்.


* நியாயமான தவறுகளை மறந்துவிடுங்கள்.


* வாழ்க்கையில் முன்னோக்கிப் போக வேண்டும்; பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.


* 'என்னுடைய நம்பிக்கை என்னும் ஊற்று' காயாமல் இருக்க வேண்டும் என்று கவனமாக இருக்கிறேன்.


* முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் ஒரு தவறை இன்னொரு தவறால் திருப்பிக் கொடுக்க வேண்டாம்.


* எதிரியாக இருந்தாலும் பசி தீருங்கள்.


* பகைவனானாலும் தாகம் தீருங்கள். பழிவாங்குவதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.


* நான் என்னுடைய கையில் சாட்டையை வைத்திருக்கவில்லை.
மென்மையும் அன்புமே என்னுடைய ஆயுதங்கள்.


* தனி மனிதன் குற்றத்திற்காக சமுதாயத்தைத் தண்டிப்பது தவறு.தனி மனிதன் வேறு, சமுதாயம் வேறு.


* நல்லதும் தீயதும் எப்படி பங்காளிகளாக இருக்க முடியும்?


* இறந்தவர்கள்தான் தவறு செய்யமாட்டார்கள். ஆனால் நான் வாழுகின்ற மனிதன். என்னுடைய தவறுகளை மறந்துவிடுங்கள்; மன்னித்துவிடுங்கள்.


* காரணங்களைவிட உணர்வுகள்தான் மனித உறவுக்குச் சங்கிலி.


* யார் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறானோ, அவன் தான்
அதிகமாக ஏமாறுகிறான்.


* நேர்மை, பின்னமாக இயங்க முடியாது.


* விழலாம், எழாமல் இருக்கக் கூடாது.


* செய்த தவறை உணர்ந்தால் தவறு பாதியாகக் குறைகிறது.
நியாயப்படுத்தினால் இரட்டிப்பாகிறது.


நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்.

No comments:

Post a Comment