தங்களின் வருகைக்கு நன்றி

Sunday, February 7, 2010

அரசு பொதுத் தேர்வு- சாதனை படைக்க TIPS

         
         மார்ச் 1ம்தேதி பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பமாகிறது என்பதால் நேரத்தை வீணடிக்காமல் படிக்க வேண்டும். அதற்கு 5 தடைக்கற்கள் நம்மைச் சுற்றி கொண்டிருக்கின்றன. வீட்டு சூழ்நிலை கூட நமக்கு தடையாக இருக்கலாம். ஆனால் 95 சதவீத பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பில் அக்கறை கொண்டவர்கள் தான். தெரிந்தோ தெரியாமலோ 5 சதவீத பெற்றோர்கள் அப்படியும் இப்படியும் இருக்கலாம்.
           
தேர்வுக்கு முந்தைய நாட்களில் எண்ணை பதார்த்தங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். தேவைக்கு அதிகமாக எதையுமே சாப்பிடாதீர்கள். தேவைக்கு அதிகமாக சாப்பிட்டால் தேர்வறையில் தூக்கம் வரும். வழக்கமான அளவைவிட குறைவாக சாப்பிட்டால் மயக்கம் வரும். எனவே தேவையான அளவு மட்டும் சாப்பிடுங்கள். தேர்வுகள் முடிந்ததும் ஆசைதீர சாப்பிடுங்கள். நயவஞ்சக நண்பர்களை நம்பாதீர்கள். தேர்வு தொடங்குவதற்கு முதல் நாள் வரை தான் நண்பர்கள். தேர்வுகள் முடிந்த பிறகு நண்பர்களை பார்த்துக் கொள்ளலாம். தேர்வு மீது ஆர்வத்தை குறைக்கும் வகையில் பேசுபவர்களை உதாசீனப்படுத்துங்கள்.

வினாத்தாள் அவுட்டாகி விட்டதாம், படிக்காத பாட பகுதியில் இருந்து தான் கேள்விகள் கேட்கிறார்களாம் என்றெல்லாம் சொல்லும் நண்பர்களை நம்பாதீர்கள். தாழ்வு மனப்பான்மையை கைவிடுங்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்களும், காப்பி அடிப்பவர்களும் இங்கு வரவில்லை. தேர்வுக்கு முன்பும், தேர்வு நாளிலும், கடைசித் தேர்வு எழுதும் வரையிலும் பதட்டமே இருக்கக் கூடாது. எவ்வளவு நண்பனாக இருந்தாலும் தேர்வுகள் முடிந்த பிறகு பேசிக் கொள்ளுங்கள். வினாத்தாளை படித்ததும் தெரிந்ததை, படித்ததை எழுதுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

 எளிதான முறையில் தேர்வு எழுதி 100க்கு 100 மதிப்பெண் வாங்க மாணவர்களுக்கு பேராசிரியர் பாலகிருஷ்ணன் கூறிய 10 கட்டளைகள்:

1.பொதுத் தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் திட்டமிடுதல் அவசியம். எதை படிப்பது, எது கடினம், எந்த பாடத்தில் நமக்கு "வீக்' என்பதை உணர்ந்து திட்டமிட்டு படிக்க வேண்டும்.

2. கணக்கு பாடத்தை படிக்கக் கூடாது. எழுதி தான் பார்க்க வேண்டும். மனப்பாட பகுதிகளை எழுதி பார்க்க வேண்டும். படங்களை வரைந்து பார்க்க வேண்டும்.

3. இப்போது பின்பற்றி படிக்கும் முறையை மாற்றக் கூடாது. படிக்கும் முறையையே கையாளுங்கள். ஒரு பாடத்தை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் படிக்காதீர்கள். மனம் சோர்வடையக் கூடாது.

 4. புரிந்து கொண்டு மனதில் பதிய வைத்து படிக்க வேண்டும். கேள்விகளை புரிந்து கொண்டு பதில் எழுத வேண்டும்.

5. பாடத் திட்டங்களை தயார்படுத்தி சந்தேகங்களை தவிர்க்க வேண்டும்.

6. குறிப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டும். (பிட் தயாரிப்பதல்ல).

7. தியானித்தல். தேர்வெழுத தொடங்கும் முன்பு ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும். எதன் மீது நம்பிக்கை உள்ளதோ அதன் மீது தியானிக்க வேண்டும்.

8. வினாத்தாளில் தெரிந்தவற்றை தேர்வு செய்து தெளிவாக எழுத வேண்டும். ஒரு பக்கத்திற்கு 25 வரிகளுக்கு அதிகமாக எழுதக் கூடாது.

9. தேர்வெழுதி முடிந்ததும் ஒருமுறை திருப்பி பார்க்க வேண்டும். பின்னால் இருப்பவரை திரும்பி பார்க்கக் கூடாது. பிட் அடித்தால், காப்பி அடித்தால் 3 வருஷம் உள்ளே இருக்க வேண்டுமென்பதை மறந்து விடாதீர்கள்.

10. நம்பிக்கை வைத்து தேர்வெழுத வேண்டும். இவ்வாறு பேராசிரியர் பாலகிருஷ்ணன் பேசினார்.

               தேர்வுக்கு சுமார் ஒரு மணி நேரம் முன்னதாக செல்ல வேண்டும். வினாத்தாள்களை படித்து முடிக்க உரிய நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதை நல்ல முறையில் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேள்வியில் சந்தேகம் இருந்தால் அது குறித்து நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது. அடுத்து தெரிந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். இதனால் நேரம் வீணாவதை தவிர்ப்பதோடு பதட்டம் இல்லாமலும் இருக்கும். உணவு விஷயத்தில் தேர்வு காலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காரவகைகள், மசாலா வகைகளை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

நன்றி : தினமலர்

No comments:

Post a Comment