தங்களின் வருகைக்கு நன்றி

Wednesday, March 10, 2010

உலகிலேயே சின்னஞ்சிறு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

உலகிலேயே மிகவும் குறைந்த நிறையுடன் பிறந்த ஆண்குழந்தையொன்று தொடர்பான விபரங்கள்  ஜேர்மனிய மருத்துவர்களால்
வெளியிடப்பட்டுள்ளன.

சில வாரங்களின் பின்னர்,
9 அவுன்ஸ் நிறையுடன் 25 வார பிரசவத்தில் மேற்படி ஆண் குழந்தை பிறந்தபோது, அக்குழந்தை எச்சமயமும் இறக்கலாம் என மருத்துவர்களால் கருதப்பட்டது.

எனினும் தற்போது 8 மாத வயதாகிய நிலையில் முழு ஆரோக்கியத்துடன் அக் குழந்தை காணப்படுவதையடுத்து மருத்துவர்கள் இந்த அதிசய குழந்தை தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

8 மாத வயதான இக்குழந்தை உலகில் உயிர் வாழும் மிகச் சிறிய ஆண் குழந்தை என்ற பெருமையை பெறுகிறது.
இந்த ஆண் குழந்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜேர்மனியில் கொட்டிங்கன் நகரிலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
குழந்தையின் பெற்றோர் குழந்தையுடன்

2004 ஆம் ஆண்டில் அமெரிக்க மியாமி நகரைச் சேர்ந்த தாயொருவருக்கு பிறந்த பெண் குழந்தையொன்று, மிகவும் முன் கூட்டியே பிறந்த குழந்தையாக விளங்குகிறது. இக் குழந்தை 21 வார பிரசவத்தில் பிறந்தது. பிரித்தானியாவில் ஒவ்வொரு வருடமும் 80,000 குழந்தைகள் உரிய பிரசவ காலத் திற்கு முன் பிறந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.

12 அவுன்ஸுக்கும் குறைந்த நிறையுடைய குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment