தங்களின் வருகைக்கு நன்றி

Monday, October 11, 2010

முன்னுதாரண கிராமம்

      இலங்கை புத்தளம் மாவட்டத்திலுள்ள புழுதிவயல் கிராமத்தில் சிகரட், பீடி, சுருட்டு, புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்வதில்லை என புழுதிவயல் கிராம கடை உரிமையாளர்கள் தீர்மானித்து அதனை அமுல்படுத்தியும் வருகின்றனர்.



        புழுதிவயல் பட்டானி சாஹிப் ஜும்ஆ பள்ளியின் கீழ் இயங்கும் அனைத்து மஹல்லா நிர்வாகக் குழு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாகவே மேற்குறித்த புகைத்தல் பொருட்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

         புழுதிவயல் கிராமத்திலுள்ள 8 மஸ்ஜிதுகளிலிருந்து இருவர் வீதமும் ஜும்ஆப் பள்ளி தலைவர் மற்றும் பேஷ் இமாம் உட்பட 19 பேர் கொண்ட நிர்வாகக் குழுவே அனைத்து மஹல்லா நிர்வாகக் குழு என்ற அமைப்பினை முன்னெடுத்துச் செல்கின்றனர். இந்தக் குழுவினருக்கு ஊர் மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

          புழுதிவயல் கடை உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து புகைத்தலினால் ஏற்படும் தீங்குகள் பற்றி குத்பா பிரசங்கங்கள் மூலமும் பயான் நிகழ்ச்சிகள் மூலம் விளக்கியுள்ளனர்.

          சிகரெட், பீடி, சுருட்டு, புகையிலை விற்பனையால் தமது சமுதாயத்திற்கு ஏற்படும் விபரீதங்களை உணர்ந்த வியாபாரிகள் உடனடியாக இவற்றின் விற்பனையை முழுமையாக நிறுத்தியுள்ளனர். நோன்பு காலமாக இருப்பதால் தேநீர், உணவு கடைகளை பகல் நேரங்களில் மூடுதல், பட்டாசுகள் விற்பதை
நிறுத்துதல் போன்றவைகளையும் இவர்கள் அமுல்படுத்தி வருகின்றனர். தேநீர், உணவுக் கடைகள் மாலை, இரவு நேரங்களில் மாத்திரம் நோன்பு காலத்தில் திறக்கப்படுகின்றன.

         புழுதிவயல் கிராமத்தில் மொத்தமாக 24 கடைகள் உள்ளன. இந்த கடை உரிமையாளர்கள் முன்னெடுத்துள்ள மற்றுமொரு முயற்சியின் பலனாக அதான்(பாங்கு) ஒலித்ததும் தொழுகைக்காக கடைகளை மூடப்படுகின்றன. புழுதிவயல் கிராமம் கரப்பந்தாட்டத்தில் புகழ் பெற்ற கிராமமாகும். அதுவும் நோன்பு காலங்களில் இரவு நேர கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுவது வழமை. புழுதிவயல் அனைத்து மஹல்லா நிர்வாகக் குழு மேற்கொண்ட மற்றுமொரு முயற்சியாக நோன்பு காலத்தில் இரவு நேர கரப்பந்தாட்ட போட்டிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ் நல்லதோர் எடுத்துக்காட்டு....
நன்றி: சிராஜ் அப்துல்லா

No comments:

Post a Comment