தங்களின் வருகைக்கு நன்றி

Thursday, April 7, 2011

வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டியவை

       அன்புள்ளம் கொண்டவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும், இது சட்டமன்ற தேர்தல் காலம் வேட்பாளர்கள் தங்களின் பல்வேறு வாக்குறுதிகளை கூறிக்கொண்டு வாக்குச் சேகரித்தவண்ணம் தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. ஆகவே வாக்காளர்களாகிய நாம் கீழ்கண்டவைகளை கடைப்பிடிப்பது கட்டாய கடமை என்கிறது இந்திய ஜனநாயகம்.


1. நாம் வாக்களிப்பது இந்திய ஜனநாயக கடமை. ஆகவே கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

2. நாட்டை ஆள்பவரை தேர்ந்தெடுப்பவர்களில் நானும் ஒருவர் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும்.

3. நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் உங்கள் தொகுதியின் பிரதிநிதியாக
 சட்டமன்றத்திற்கு அனுப்பப்படுபவர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
வேட்பாளர்களில் யார், யார்; எப்படி, எப்படி; என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். மற்றவர்களிடம் அலசி ஆராயவேண்டாம்.

4. வேட்பாளர்களின் விபரம்/நிலைமை பற்றி தேர்தல் ஆணையமே அவர்களின் வலைப்பதிவில் விபரமாக கொடுத்துள்ளது. ஆகவே (தஞ்சை மாவட்டம் மட்டும்)இங்கே கிளிக் செய்து நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

5. சுயமாய் சிந்தித்து அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவேதான் வாக்காளர்கள் சிந்திக்க தேர்தல் பிரச்சாரம் ஒரு நாள் முன்பே நிறுத்தப்படுகிறது.

6. நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்பதை யாரிடமும் கூற‌வேண்டாம்.

7. வக்காளிக்கச் செல்லும்போது கட்டாயம் வாக்காளர் அடையாளச்சீட்டை கொண்டுச்செல்லுங்கள். அது உங்கள் வீட்டிற்கே அரசு அலுவலர்கள் மூலம் கிடைத்துவிடும்.

8. வாக்குப்பதிவு ரகசியம் காக்கப்படவேண்டும். நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதையும் யாரிடமும் கூற‌வேண்டாம். ரகசியமாக வைத்திருங்கள்.

வாக்காளர்களே! வக்களிப்பது நமது உரிமை.

இது நமது நாட்டிற்கு செய்யவேண்டியக் கடமை.
யாருக்காகவும் அல்லாமல் உங்களின் சுய சிந்தனைக்குட்பட்டு வாக்களியுங்கள்! 
உங்கள் வாக்கு இரகசியமாக இருக்கும்.

No comments:

Post a Comment