தங்களின் வருகைக்கு நன்றி

Friday, January 15, 2010

அதிராம்பட்டினத்தில் ஸாதுலிய்யா


அதிராம்பட்டினத்தில் ஸாதுலிய்யாதரீக்காவின் தோற்றமும், வளர்ச்சியும்


        ஹிஜ்ரி 593ல் ஆப்பிரிக்கா நாட்டில் தோன்றி ஆத்ம பேரொளியால் அனைத்துலகப் புகழ் பெற்றுள்ள ஹல்ரத் அபுல் ஹசன் ஸாதுலி (ரஹ்) அவர்களின் ஆத்ம நான செய்தியை தாங்கி இன்றைக்கு ஏறத்தாழ 140 வருடங்களுக்கு முன் அதிராம்பட்டினம் வந்த ஹல்ரத் மிஸ்கீன் சஹிபு ஒலியுல்லாஹ் அவர்களை ஊர் மக்கள் என்றுமே மறக்க முடியாது. அவர்கள் ஸாதுலிய்யா தரீக்காவின் தத்துவங்களை விளக்கி கூறி மக்கள் மனங்களில் மங்காத இடம் பெற்று விட்டார்கள். அவர்கள் பெயரால் அமைந்த மிஸ்கீன் ஸாஹிபு பள்ளிவாசல்  (புதுத்தெரு)  அவர்களின் சின்னமாய் என்றும் இன்ஸா அல்லாஹ் நின்று நிலவும்.


         ஹலரத் மிஸ்கீன் ஸாஹிபு ஒலியுல்லாஹ் மறைவிற்கு பின் ஸாதுலிய்யா தரீக்காவின் வளர்ச்சியில் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதன்பின் ஸைகு முஹம்மது சாலிஹ் மவ்ளானா, ஸைகு சம்சுத்தீன் மக்கீ ஆகியோர் இவ்வூருக்கு வருகை தந்து இத்தரீக்காவிற்கு புத்துனர்வுயூட்டினர்.


           பிறகு உள்ளூர் பிரமுகர் அல்ஹாஜ் ஹபீப் முஹம்மது வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளூர் செல்வந்தர்கள் மூலம் முதலாவதாக ஜாவியா கட்டப்பட்டது. ஏறத்தாள 115 வருடங்களுக்கு முன்  ஒரு செல்வந்தர் அவர்களால் பெரும் பொருளுதவி செய்யப்பட்டது.


            பின்னர் மதிப்பிர்குரிய ஸேகனா மு.அ. அஹ்மது லெப்பை ஹாஜியார் அவர்கள் கலீபாவாக நியமிக்கப்பட்டார்கள்.  பிறகு ஸேகனா அவர்களின் மறைவுக்கு பின் தொன்றுதொட்டு ஜாவியாவில் தினமும் காலை மற்றும் மாலையில் ஸாதுலிய்யா தரீக்காவின் புனிதமிக்க திக்ரு ( ஹலரா ) மஜ்லிஸ் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment