தங்களின் வருகைக்கு நன்றி

Monday, January 11, 2010

பனி உருண்டைகள்


பிரிட்டன் மண்ணில் தோன்றிய
அதிசய பனி உருண்டைகள்





இந்த பனி உருண்டைகள் ஆங்கிலத்தில் ஸ்னோரோலர்ஸ், ஸ்னோ பால்ஸ், ஸ்னோ டவ்நட்ஸ் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை ஆளரவற்ற, அடர்த்தியான பனி பிரதேசங்களில் எப்போதாவது தோன்றக்கூடியது. பனித்துகள்கள், ஐஸ் கட்டிகள், காற்று, தூசு, தட்பவெப்பநிலை ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த அதிசய பனி உருண்டைகளை உருவாக்குகின்றன. இந்த பனி உருண்டைகளை வடஅமெரிக்காவில் உள்ள பனி பிரதேசங்களில் காணலாம். இவை உருண்டு உருண்டு நகர்வதைப் பார்ப்பதற்கே ஆச்சரியமாய் இருக்கும்.




தற்போது இவை பிரிட்டன் மண்ணிலும் தோன்றி, பொதுமக்களின் பார்வையில் பட்டிருக்கிறது.

பிரிட்டன் சோமர்செட் நகரில் உள்ள இயோவில் என்ற பகுதியில் திடீரென முளைத்த இந்த பனி உருண்டைகளை கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்தனர் அப்பகுதி மக்கள். பனி உருண்டைகளைக் கண்டவர்களில் ஒருவரான ட்ரிவர்ட் தன்னுடைய கருத்தை பரிமாறிக்கொள்கையில்,



“எங்கள் நாயை வாக்கிங் கூட்டிச்செல்லும் போதுவெகு தூரத்தில் இந்த பனி உருண்டைகளை ப்பார்த்தோம். பார்க்க சின்ன குழந்தைகள் விளையாட்டாகப் பனியை திரட்டி உருண்டைகளாக்கியிருக்கிறார்கள் என முதலில் நினைத்தோம். பின்னர அருகில் சென்று பார்க்கும்போதுதான் அவை இயற்கையாக உருவானவை என்பதை அறிந்தோம். ஆச்சரியமடைந்தோம்” என்று கூறியிருக்கிறார்.



இயற்கை உருவாக்கும் அதிசயங்களில் இந்த பனி உருண்டைகளும் ஒன்று. அதைக் காணும் மனிதர்களும் அரிதுதான். அந்த விதத்தில் அதைக் கண்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

No comments:

Post a Comment