கல்லூரிகளில் 3 ஆண்டுகள் படித்து முடித்து பட்டம் வாங்குவதற்கே விழிபிதுங்கித் திரியும் மாணவர்களுக்கு மத்தியில், 40 ஆண்டுகளாக தொடர்ந்து படித்து பட்டங்களை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறார், 80 வயது "இளைஞர்".
கல்வித் தாகம் தணியாத அந்த மாணவரின் பெயர், எம்.கே. பிரேம். ஜெய்ப்பூரைச் சேர்ந்த இவர், மால்வியா தேசிய பொறியியல் கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றி, கடந்த 1989ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். கடந்த 1943ம் ஆண்டு ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மீரட் கல்லூரியில் பி.எஸ்சி., பட்டம் பெற்றதும், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். அங்கு தொடங்கிய தனது பட்டங்கள் இன்னிங்ஸை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இதுவரை இவர் பெற்றுள்ள பட்டங்கள்: பிஎஸ்சி., (1943), எம்ஏ -ஆங்கிலம்(1946), எம்ஏ - பொருளாதாரம் (1957), எம்பிஏ (1968), எம் ஃபில் (1977), எல்எல்பி (1991), வரிச் சட்டம் குறித்த் முதுகலைப் பட்டயப் படிப்பு (1992), குற்றவியல் குறித்த முதுகலைப் பட்டயப் படிப்பு (1998), பிஏ (2006), எல்எல்எம் (தற்போது படித்துக்கொண்டிருக்கிறார்). இதன் மூலம் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் நீண்டகால மாணவர் என்ற பெருமையை பிரேம் பெற்றுள்ளார்.
தற்போது தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருக்கும் பிரேம், தனது சாதனை குறித்து கூறும் போது, "வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டுமே என்பதற்காக பட்டம் பெறும் நிலை மாற வேண்டும். மேற்படிப்புகள் என்பவை நம் அறிவை விரிவுபடுத்திக் கொள்ளவதற்கே. இதைப் புரிந்து கொண்டு, ஆர்வமுள்ள துறைகள் பற்றி படிப்பதற்கு மாணவர்கள் முனைப்பு காட்ட வேண்டும்" என்றார்.
தற்போது நடைபெறும் தேர்வுகள் முடிந்த பின், புதிய பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என கர்ம சிரத்தையாக பேசுகிறார் இந்த மாணவர்.
அதிரை அல் -அமீன் பள்ளியின் முக்கிய வேண்டுகோள்
-
அதிரை அல் -அமீன் பள்ளியின் முக்கிய வேண்டுகோள்
6 years ago






No comments:
Post a Comment