நம்முடைய இமாம் ஷாபி பள்ளியின் புதிய முதல்வராக பதவி ஏற்றுல்ல பேராசிரியர் பரகத் அவர்களிடமும் சில நிமிடங்கள் மட்டும் உரையாட முடிந்தது. அவர்கள் பதவி ஏற்றவுடன் சில மாற்றங்கள் இமாம் ஷாபி ஆண்கள் பள்ளியில் ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய மாற்றங்களை நாம் எதிர்ப்பார்க்கலாம்.
பேராசிரியர் பரகத் அவர்கள் நிறைய சீனியர் மாணவர்களின் படிப்பு பற்றியும், ஒழுக்கங்கள் பற்றியும், அவர்களின் பேச்சுக்கள், நடவடிக்கைகள் பற்றியும் மிக கவலையாக சொன்னார்கள், மிக கவலைப்பட வேண்டிய விசையம். ஒருவன் நல்ல மனிதன் என்பதற்கு அவனின் கல்வித் திறமையும், நல்ல ஒழுக்கமும் தான் முன் நிற்கும் என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன்.
பேராசிரியர் பரகத் அவர்களிடம் உரையாடிய பிறகு என் மனதில் கேள்விகள் பல வந்து சென்றது. “நம்மால் நம் வருங்கால சமுதாயத்தின் தூண்கலாக வரப் போகும் நம்மூர் மாணவர்களுக்காக ஏதாவது செய்ய முடியுமா?” நீண்ட யோசனைகளுக்கு பிறகு பதில் வந்தது.
நம்மூரின் எத்தனையோ நல்லா படித்த சகோதரர்கள் பொருளாதர தேடலினால் வெளிநாட்டுக்கு சம்பாத்தியாத்திற்கு தள்ளப்பட்டாலும், தற்போதைய காலகட்டத்தில் நம் இளைய தலைமுறையை பற்றிய கவலை நம் மனதில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
இப்போது விசையத்துக்கு வருகிறேன். STUDENT ALUMNI அமைப்புகள் நம்மூர் பள்ளிகளில் உள்ளதா? யாருக்காவது தெரியுமா? வெளிநாடுகளிலாவது உள்ளதா? பதில் இருந்தால் தயவு செய்து விபரங்களுடன் தெரியப்படுத்துங்கள்.
நம்மூரின் 90% படித்த சகோதரர்கள் தங்களின் பள்ளி நாட்களை அதிரையில் தான் படித்திருப்பார்கள் என்று நம்புகிறேன், நம்முடைய அனுபவங்களை நம்மூர் பள்ளி மாணவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள நாம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம், குறிப்பாக 10, 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமாவது குறைந்த பட்சம் மாதத்தில் ஒரு நாளில் “GUEST LECTURE” க்காக ஒரு மணி நேரம் அனைத்து பள்ளிகளும் ஒதுக்க வேண்டும். எந்த பள்ளியில் படித்தோமோ அந்த பள்ளிகளுக்கு சென்று நாம் மாணவர்களை உற்சாகப்படுத்தி நம்முடைய நல்ல அனுபவங்களையும், நல்ல உதாரணங்களையும் எடுத்துக்காட்டி நல்ல ‘MOTIVATIONAL SPEECH’ கொடுக்கலாம்.
தினம் தினம் பார்த்து பழகிப்போன ஆசிரியர் கூறும் அறிவுரைகள் மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பது உண்மை தான். ஆனால் புதிய முகங்கள், இளைய தலைமுறைகள், நல்ல படிப்பு படித்தவர்கள், நல்ல துறையில் பணியாற்றிவருபவர்கள், முக்கியமாக அதிரைக்காரர்கள் என்ற நல்ல PROFILE உள்ள நாம் நம்ம ஊர் மாணவர்களுக்கு ‘MOTIVATIONAL SPEECH’ உடன் சேர்ந்த அறிவுரைகள் செய்தால் நிச்சயம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது என்னுடைய POSITIVE நம்பிக்கை.
GUEST LECTURE MOVITIVATIONAL SPEECHக்கு பள்ளி நிர்வாகமும், முதல்வர்களும், ஆசிரியர்களும் ஒரு நல்ல திட்டத்தை ஏற்படுத்த வேண்டும், அதிரையில் படித்த சகோதரர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்துப் பள்ளிகளும் தனித் தனியாகவோ அல்லது கூட்டு முயற்சியாக ஒரு குழுவை நியமித்து செயல்படலாம்.
ஒவ்வோரு பள்ளியும் பழைய மாணவர்கள் குழு (STUDENT ALUMNI) மீண்டும் சிறப்பாக ஏற்படுத்த வேண்டும், உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், நம்மூர் பள்ளிகளில் இது இருப்பதாக இதுவரை தெரியவில்லை, அப்படி இருந்தால் அவற்றை மிகச் சிறப்பாக செயல்பட வைக்க அப்பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் நம் எதிர்கால சந்ததியினரின் நலனை மட்டும் எண்ணத்தில் வைத்து முன்வர வேண்டும்.
வெளிநாடுகளில் இருக்கும் படித்த சகோதரர்களும், உள்ளூரில் இருக்கும் சகோதரர்களுக்கும், பள்ளி முதல்வர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே நல்ல ஒரு தொடர்பு (இயக்கங்கள் இல்லாத) ஏற்பட வேண்டும். இதற்கு STUDENT ALUMNI அமைப்புகளால் மட்டும் தான் முடியும்.
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி இன்று தமிழகத்தில் ஒரு தலைசிறந்த கல்லூரியாக இருப்பதற்கும், மற்ற கல்வி நிறுவனங்கள் தலைசிறந்தவைகளாக திகழ்வதற்கு STUDENT ALUMNI ஒரு முக்கிய காரணமாக இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. உண்மை தானே?
குடும்பவாரியாகவும்,தெருவாரியாகவும்,இயக்கங்கள்வாரியாகவும்,ஒற்றுமையற்று இருக்கும் நம்மூரில் இது சாத்தியப்படுமா? சாத்தியப்படவைக்க நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முடியும் என்பது நம்முடைய நம்பிக்கை. நம் வருங்கால சமுதாயத்துக்காக நாம் செய்யும் ஒரு சிறிய முயற்சி மட்டுமல்ல ஒரு சமூகப் புரட்சி.
இதைப் படிப்பவர்களுக்கு இதைவிட நல்ல யோசனைகள், ஆலோசனைகள் வந்தால் பின்னூட்டமிடலாம். நம்மூர் பள்ளி நிர்வாகங்கள் இந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுமா? அல்லாஹ்வின் உதவியுடன் நம் சமுதாயத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்ற நம்பிக்கையுடன் விடைப்பெறுகிறேன்.
அன்புடன் தாஜுதீன்






No comments:
Post a Comment