தங்களின் வருகைக்கு நன்றி

Sunday, November 7, 2010

மக்கா மெட்ரோ ரயில்

             சவூதி அரபிய அரசால் உருவாக்கப்பட்ட புதிய ரயில்வே பாதை மினா,அரபாத்,முஜ்தலிபா மற்றும் மக்கமா நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

                         இது 1 மணிநேரத்தில் 72,000 ஹஜ் பயணிகளை பயணிக்கவைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மினா, அரபாத்,முஜ்தலிபா ஆகிய நகரங்களில் ஒவ்வொன்றும் மூன்று ரயில் நிலையங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மார்க்கத்தில் முதல் தடவையாக 10 ரயில்கள் இயக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் 300 மீட்டர் நீளம் கொண்டது. ஒவ்வொரு ரயிலும் 12 பெட்டிகள் கொண்டு ஒவ்வொரு பெட்டியிலும் 250 பய‌ணிகள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 20% பயணிகள் உட்கார்ந்தும் 80% பயணிகள் நின்றுக்கொண்டும் பயணிக்கலாம். இதன் வேகம் மணிக்கு 80 முதல் 120 கி.மீ ஆகும்.

             ஹஜ் பயணிகள் துல்ஹஜ் 9 ஆம் நாளில் அரபாத்திலிருந்து முஜ்தலிபாவிற்கு 5 நிமிடத்தில் பயணிக்கும் வகையிலும், துல்ஹஜ் 10 ஆம் நாளில் முஜ்தலிபாவிலிருந்து மினாவுக்கு 5 நிமிடத்தில் பயணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஒட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக மக்கா, மதீனா மற்றும் ஜித்தா நகரங்களை இணைக்கும் வகையில் மற்றொரு ரயில்வே பாதை அமைக்க சவூதி அரசு திட்டமிட்டுள்ளது.

            இந்த ரயில் பாதை துல்ஹஜ் 9 மற்றும் 10 ஆம் நாட்களில் அதிக சிரமத்திற்குள்ளாகும் ஹஜ் பயணிகளுக்கு அல்லாஹ் கொடுத்த ஒரு அருட்கொடை அல்ஹம்துலில்லாஹ்...!

1 comment:

  1. வாருங்கள் கை கோர்ப்போம்.
    வேரறுப்போம் கைக்கூலியை
    இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete