தங்களின் வருகைக்கு நன்றி

Wednesday, February 9, 2011

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

          தற்போது தேர்வுகாலம், அரசு நடத்தும் +2 செய்முறை தேர்வுகள் முடியும் நிலையில் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. அரசு பொது தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.

அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்

1) நம்பிக்கை : முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம், என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் ஒரு காரியம் நம்மால் இயலாது என நினைக்கலாம், ஆனால் நம்மை படைத்த இறைவனால் அது இயலும்.
"(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்". (அல் குர் ஆன் : 33:3 ).

2) ஆர்வம்: படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.  படிக்கும் போது இந்த பாடம் கடினமான பாடம்என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது,”

3) மறதி: படித்த‌து தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். இதை மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது,கவனமாக படியுங்கள்.  இரவு படிப்பை (Night study after 10 'o clock) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் (Wakeup early 4 'o clock )படியுங்கள். படித்த‌தை எழுதி பாருங்கள். ஆர்வமாக படித்தால் எதுவும் மறக்காது.

4) படிக்கும் முறை  : பொதுவாக நாம் தேர்விற்காக  படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டுபடிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை  கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.

5) நாம் நமக்காக படிக்கின்றோம்: நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாபோகும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான், என்பதை நீங்கள் உணர வேண்டும்.

6) கடின உழைப்பு : அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்துவிட்டு கவனத்துடனும் படிக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.

7) குறிபிட்ட பாடத்திற்கு அதிக கவனம் செலுத்தி படிப்பது : எனவே குறிபிட்ட பாடத்தில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். உங்கள் ஆசிரியர் கொடுத்த( Blue print of subject ) அதிக மதிப்பெண் கிடைக்கும் பாடங்களை முதலில் படிக்க வேண்டும்.

8) பிரார்த்தனை : படிக்கும் முன் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு படிக்க வேண்டும், நம் பெற்றோர்களையும் நமக்காக பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும், எதாவது பாடம் கடினமாக இருந்தால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
"என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக!" (அல்-குர் ஆன் 20 : 114)

9) படிக்கும் போதே முக்கியமானவைகளை தனியாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும், பின்னர் நாம் பாடத்தை Revise -பன்னுவதற்கு இது எளிதாக இருக்கும்.

No comments:

Post a Comment