தங்களின் வருகைக்கு நன்றி

Wednesday, January 5, 2011

பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் கடமை!

      மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் மாணவர்கள் வயது குறைந்தவர்கள், பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே  தங்களுடைய பிள்ளைகள் சரியா படிக்கின்றதா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம், பார்க்காமல் எழுதி காண்பிக்க சொல்ல வேண்டும். குறிப்பாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை படிப்பை தவிற மற்றதின் பக்கம் கவனத்தை திரும்பிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

1. டிவி பார்ப்பதை (குறைந்தது ஜனவரி முதல் ஏப்ரல் வரை) தவிற்கவும், நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள் கேபிள் இணைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.

2. மாணவ மாணவிகளிடம் இருந்து கட்டாயம் செல்போனை பறித்துவிடவும். தேர்வு முடியும் வரை செல்போனை தரவேண்டாம். (பெண் பிள்ளைகளுக்கு தேர்வு முடிந்தாலும் செல்போனை தர வேண்டாம்). படிப்பில் சிறந்து விளங்குவதற்கும் செல்போனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள், கணினியில் (Computer -ல்) படிப்பதற்கு தவிற வேரெதற்க்கும் பயன்படுத்த கொடுக்காதீர்கள். கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிக்கு முழுமயாக தடை போடுங்கள்.

4.. மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும் நல்ல சத்துள்ள உணவுகளை கொடுக்கவும். பிள்ளைகளை திட்ட வேண்டாம் சபிக்க வேண்டாம், அன்பாக அவர்களுடைய தவறை சுட்டிகாட்டவும்.

5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட படிப்பதற்க்கான சூழ் நிலையை ஏற்படுத்திகொடுங்கள். படிப்பதை கண்கானியுங்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாக சொல்லுங்கள். திட்ட மிடுதல், படித்தை நினைவில் நிறுத்துதல், பார்க்காமல் எழுதி பார்த்தல் போன்றவற்றில் உதவுங்கள்.

6. கல்வி கற்பது மார்க்க கடமை என்பதை புரியவையுங்கள். இஸ்லாம் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவத்தை எடுத்துகூறுங்கள். கல்வி கற்பதினால் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் நன்மையை எடுத்துகூறுங்கள்.

6. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். ஏனெனில் கல்வி கட்டணம் கட்டுவது நீங்கள்தான். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

7. உங்கள்வீட்டு பொருளாதார சூழ்நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வழியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுகவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருங்கள்.

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2011,ஜனவரி 14-15,வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் அதிரையில் 'கல்வி விழிப்புணர்வு மாநாடு' நடை பெறவுள்ளதை அறிவீர்கள். கட்டாயம் பெற்றோர்கள் கலந்து சிறப்படையச் செய்யுங்கள்.

நமது முஸ்லீம் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்க அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக!.

3 comments:

  1. அருமையான ஆக்கம் சூழல் கண்டு வெளிவந்தது நன்மையை கருதியே !

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெறும் இவ்வேளையில் இது போன்ற ஆக்கங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மிக அருமை..

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே...

    //நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள்//

    சரியாக சொன்னீர்கள், எங்கே பிரச்சினை ஆரம்பமாகிறது என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்...

    ReplyDelete
  3. கருத்தினை பகிர்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete